WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதிகள்!
7 ஆனி 2017 புதன் 12:49 | பார்வைகள் : 9018
வாட்ஸ்-அப்பின் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வாட்ஸ்-அப் மூலம், குறுஞ்செய்திகள், போட்டோக்கள், வீடியோ உள்ளிட்டவற்றை நமது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு நாம் அனுப்ப வேண்டிய செய்திகளை மறதியால் அனுப்பாமல் விடுவதும் உண்டு. இதற்காக தற்போது ஆண்ட்ராய்டு போன்களில், வாட்ஸ்அப்பில் ஷெட்யூலர் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில், ஷெட்யூலர் ஃபார் வாட்ஸ்அப் (Scheduler for WhatsApp) மற்றும் ஷெட்யூலர் நோ ரூட் (Scheduler NO ROOT) செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டும். பின்னர், இன்ஸ்டால், செட்டிங்கஸ், அக்சஸ்ஸிபிலிட்டி, சர்வீசஸ், ஆப்ஷன்களை அழுத்த வேண்டும்.
இதையடுத்து ‘+’ என்ற ஐகான் வாட்ஸ்அப்பின் அடியில் தோன்றும். இதனை கிளிக் செய்து நேரம், தேதி உள்ளிட்டவற்றை தேர்வு செய்து மெசேஜ்களை ஷெட்யூல் செய்து, தேவையான நபர்களுக்கு தேவையான நேரத்தில் அனுப்பி கொள்ளலாம்.
மேலும். நாம் இந்த ஷெட்யூலரை பயன்படுத்தும்போது நமது மொபைலின் திரை லாக் அல்லது எந்தவித பின் லாக், அல்லது ஃபிங்கர் பிரின்ட் லாக் உள்ளிட்ட லாக்குகளை பயன்படுத்தக்கூடாது.