Paristamil Navigation Paristamil advert login

Android போன் சார்ஜை பாதுகாப்பது எப்படி?

Android போன் சார்ஜை பாதுகாப்பது எப்படி?

30 வைகாசி 2017 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 9162


 இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது சீக்கிரமாக போனில் சார்ஜ் தீர்ந்து போய்விடுவது தான்.

 
மொபைல் சார்ஜை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
 
  • மொபைல் போன் வைபரேட் மோடில் இருந்தால், பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். எனவே வைபரேட் மோடில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும் போது, சத்தம் கொடுக்கும் இதற்கு ஹேப்டிக் ஃபீட்பேக் (haptic feedback) எனும் ஆப்ஷனையும் ஆப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உங்கள் ஸ்மார்ட்போன் ஆமோல்டட் (AMOLEDED) டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தால், கருப்பு நிற வால்பேப்பர்களைப் பயன்படுத்தினால் அது பேட்டரி சார்ஜை அதிகம் குறைக்காது.
  • ஸ்மார்ட் போனில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பெரும்பாலான செயலிகள் நமது இருப்பிடத்தை லொகேஷன் டிராக்கிங் மூலமாக டிராக் செய்து கொண்டே இருப்பதால், அது பேட்டரி சார்ஜை விரைவில் குறைக்கும். எனவே அதை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.
  • ஸ்மார்ட்போன் செயல்பாட்டினை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வப்போது, இயங்குதளத்துக்கான அப்டேட்டுகளை கூகுள் அளிக்கும் போது, ஒவ்வொரு அப்டேட்டுகளை தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்
  • ஸ்மார்ட்போனுடன் நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களுக்கு செல்லும் போது, மொபைலில் ஏர்பிளேன் மோட் எனும் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். இதனால் போன் சார்ஜ் குறையாமல் இருக்கும்.
  • நமக்கு பயன்படாத நேரத்தில் ஜிபிஎஸ், ப்ளுடூத், வைஃபை போன்றவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இதனால் மொபைல் போனில் சார்ஜை அதிக நேரம் பாதுகாக்க முடியும்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்