ஒற்றுமையைக் கண்டுபிடிக்கும் புதிய App

27 வைகாசி 2017 சனி 12:11 | பார்வைகள் : 12269
ப்ளே ஸ்டோர் முழுவதும் நிறைந்து கிடக்கும் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு நடுவில், புதிய ஆப் (App) ஆக exactly.me என்பது அறிமுகம் ஆகியுள்ளது.
ஐஃபோன்களுக்காக பிரத்யேகமாக அறிமுகமாகியுள்ள இந்த ஆப், புதிய முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெசேஜ் செய்யும் ஆப்ஸ், பொதுவாக ஏற்கெனவே அறிந்த நபர்களுடன் தொடர்புகொள்ள உதவுகின்றன. இந்த ஆப் கொஞ்சம் வித்தியாசமான வகையில், ஒரே கருத்துள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொள்ள வழிசெய்கிறது.
இந்த ஆப்-ல் ஃபோட்டோவைப் பதிவேற்றிவிட்டு, தங்களைப் பற்றித் தெரிவித்து, தங்களைப் போலவே ஒரே கருத்து கொண்டவர்களைத் தேடலாம். பின்னர் அவர்களுடன் தொடர்புகொண்டு சாட் செய்யலாம்.
மெசேஜிங்கில் ஏற்கெனவே குவிந்திருக்கும் ஆப்களுக்கு நடுவில் exactly.me-இன் வரவேற்பு எப்படியிருக்கும் என்று ஆப்ஸ் உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1