Paristamil Navigation Paristamil advert login

சம்பா ரவை உப்புமா

சம்பா ரவை உப்புமா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9742


 சம்பா ரவை உப்புமா/கோதுமை ரவை உப்புமா, உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த காலை உணவு. ஏனெனில் இதில் கலோரி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இந்த உப்புமாவில், வைட்டமின் ஏ அதிகம் உள்ள பச்சை பட்டாணி மற்றும் கேரட் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த காய்கறிகள், ரெசிபிக்கு ஒரு சிறந்த சுவையைத் தருகிறது. இப்போது அந்த சம்பா ரவை உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 


தேவையான பொருட்கள்: 
 
சம்பா ரவை - 1/2 கப் 
பச்சை பட்டாணி - 1/2 கப் 
கேரட் - 1 (நறுக்கியது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது) 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
தண்ணீர் - 3 கப் 
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை: 
 
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.
 
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
 
பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறினால், சம்பா ரவை உப்புமா ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்