இன்ஸ்டாகிராமில் ஆபத்து! ஆய்வில் தகவல்

20 வைகாசி 2017 சனி 09:18 | பார்வைகள் : 14423
இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் இன்ஸ்டாகிராம் ஆப், மோசமானது என ஆய்வு ஒன்று கூறுகின்றது
பிரபல போட்டோ ஷேரிங் தளமான இன்ஸ்டாகிராம் சுமார் 70 கோடி பயனாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. 14 முதல் 24 வயதிற்குட்பட்டோரிடம் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தளங்களில் எது எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது என்று ராயல் சொசைட்டி என்ற நிறுவனம் ஆய்வு செய்தது.
சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்னையை தூண்டுவதாக இருக்கலாம் என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இளைஞர்கள் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் போது கவலை, மன அழுத்தம், தனிமை, கொடுமைப்படுத்துதல் மற்றும் தங்களின் தோற்றம் பற்றிய எதிர்மறை எண்ணம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது ஆய்வின் முடிவில் உறுதி செய்யப்பட்டது. மேலும் மனநலத்தில் மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக ஊடகம், யூடியூப் என்றும் அதற்கு அடுத்து டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இளைஞர்களில் சுமார் 90% பேர் சமூவலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் ஆழமான மனச்சோர்வுக்கு தள்ளப்படுவதாக ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. முகம் தெரியாத பல நண்பர்களை அறிமுகப்படுத்தி, பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படும் மேற்கண்ட சமூக வலைதளங்கள் மனநல பாதிப்பை ஏற்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆய்வில் வெளியாகியுள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மனநலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை சரிப்படுத்துவதற்கு சமூக வலைத்தளங்கள் ஏதேனும் தீர்வு காண வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதாவது, நீண்ட நேரம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது பாப்-அப் போன்ற அலர்ட் மெசேஜ் மூலம் எச்சரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு கருத்து கணிப்பில் பங்கேற்ற இளைஞர்களில் 70 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பிரான்சு, தொண்டைமண்டலம்
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1