Facebookஇன் புதிய அதிரடி நடவடிக்கை!
13 வைகாசி 2017 சனி 11:07 | பார்வைகள் : 9251
பேஸ்புக் தளத்தின் ஊடாக பல்வேறு இணையதளங்கள் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு விசேடமாக நியூஸ் ஃபீட் (News Feed) வசதியினையும் பேஸ்புக் தருகின்றது.
எனினும் சில இணையத்தளங்கள் ஸ்பாம்களை (Spam) பரப்புவதுடன், ஏமாற்று விளம்பரங்களையும் மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறான இணையத்தளங்களை நியூஸ் ஃபீட் சேவையிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளது.
இவ் வகைத்தளங்கள் போலியான செய்திகளையும் பரப்பி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் உடாக பேஸ்புக் பயனர்களுக்கு ஓர் சிறந்த சமூக வலைத்தள சேவையினை வழங்க முடியும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
இதேவேளை குறித்த அதிரடி நடவடிக்கையினை அடுத்து வரும் மாதங்களில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.