எமோஜியை இனி பாஸ்வேர்டாக வைக்கலாம்!
12 வைகாசி 2017 வெள்ளி 14:09 | பார்வைகள் : 8729
பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாஸ்வேர்டை மறந்து போவது.
என்னதான் அடிக்கடி நாம் பயன்படுத்தினாலும் சில நேரங்களில் மறந்துபோய்விடும்.
இதற்காக மறுபடியும் Recovery செய்து பயன்படுத்துவோம், இவர்களுக்காகவே விரைவில் வருகிறது எமோஜி பாஸ்வேர்ட்.
பெர்லின் தொழில்நுட்ப பல்கலைகழகம், உல்ம் பல்கலைகழகம் மற்றும் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைகழகம் இணைந்து எமோஜி பாஸ்வேர்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எண்களையும், குறியீடுகளையும் விட எமோஜிகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது மிகவும் எளிது, இதுதவிர மற்றவர்களும் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.