ஜூனில் வருகிறது Facebook டிவி!
11 வைகாசி 2017 வியாழன் 11:11 | பார்வைகள் : 9396
பேஸ்புக் டிவி, ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து செயல்படுவதற்கான அனைத்து தயாரிப்புகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
முதன்முதலாக ப்ரீமியம் டெலிவிஷனில் கால் பதிக்கும் ஃபேஸ்புக், 24 சொந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது. அதிக நேரம் கொண்ட நிகழ்ச்சிகளும், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்
வரையிலான நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டவுடன், ஃபேஸ்புக் ஆப்-பின் வீடியோ டேப்பிலும் காணக்கிடைக்கும்.
“இந்த ஃபேஸ்புக் டிவி, ஃபேக்புக்கிற்கான ஒரு பெரிய முதலீடு. டெலிவிஷன் விளம்பரங்கள் மூலமாகவும் ஃபேஸ்புக்கின் வளர்ச்சியை உயர்த்துவதும் இதன் நோக்கம்.
ஃபேஸ்புக் டிவிக்காக பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக செலவழிக்கப்பட்டுள்ளது” என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
விர்ச்சுவல் ரியாலிட்டி டேட்டிங் ஷோ, பிரபலமடைந்தவர்களை கொண்டு நடத்தும் நிகழ்ச்சிகள், ஹாலிவுட் நிகழ்ச்சிகள் ஆகியவை ஒளிபரப்பப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஒளிபரப்பப்பட இருந்த ஃபேஸ்புக் நிகழ்ச்சிகள், ஜூன் 17-ஆம் தேதி கேன்ஸ் லயன்ஸ் அட்வர்டைசிங் விழா நிகழ்ச்சியன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.