Paristamil Navigation Paristamil advert login

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி....!!

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி....!!

8 வைகாசி 2017 திங்கள் 11:33 | பார்வைகள் : 8701


 ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனுக்கு அடிமையே என சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக இளைஞர்கள்
 
பட்டாளம் அதிகம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், அவர்கள் அதிகம் டிஜிட்டல் அம்னீசியா என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஸ்மார்ட் போன்களின்
 
வருகைக்கு பின்னர், அனைவரும் சிறு நினைவூட்டலுக்கு கூட மூளைக்கு பதிலாக, ஸ்மார்ட் போன்களையே நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மூளையில்
 
பதிய வைக்கும் திறன் குறைந்து, நாளடைவில் படிப்படியாக முக்கியமானவர்கள் தொடர்பு எண் முதற்கொண்டு வீட்டு முகவரி வரை அனைத்தையும் மறக்கும் நிலை
 
ஏற்படுகிறது. இதையே நாம் டிஜிட்டல் அம்னீசியா என்கிறோம். எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்மார்ட் போன்களின் உபயோகத்தை குறைத்து
 
முக்கியமான விஷயங்களை மூளையில் பதிய வைப்பதுடன், முக்கிய குறிப்புகளில் எழுதி வைத்து நமது மூளை செயல்பாட்டை திறனை அதிகரிக்கச் செய்வதே நன்று
 
என்று ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்