இமாலய சாதனை படைத்தது இன்ஸ்டாகிராம்!

30 சித்திரை 2017 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 13053
பல்வேறு சமூக வலைத்தளங்கள் இன்று இணைய உலகை ஆக்கிரமித்து நிற்கின்றன.
இவற்றுள் முன்னணி வலைத்தளங்களுள் ஒன்றாக இன்ஸ்டாகிராமும் காணப்படுகின்றது.
உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள இத் தளமானது புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிர்ந்து மகிழும் சேவையை தருகின்றது.
இந்நிலையில் தற்போது சுமார் 700 மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இதன் காரணமாக பில்லியன் வரையான பயனர்களை தன்னகத்தே கொண்ட இரண்டாவது சமூகவலைத்தளம் என்ற பெயரை விரைவில் எட்டவுள்ளது.
முதலாவது இடத்தில் பேஸ்புக் காணப்படுவதுடன், ஒரு பில்லியனையும் தாண்டி இரண்டு பில்லியன் பயனர்களை நெருங்கிச் செல்கின்றது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1