முதியவர்களுக்கு உதவ விலங்குகள் உருவத்தில் ரோபோ!
22 சித்திரை 2017 சனி 07:46 | பார்வைகள் : 8676
முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக ரோபோ ஒன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.
மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ பயோமெட்ரிக் முறையில் இயங்குகிறது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் பார்வையாளர்கள் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலை, மூக்கு, வால் பகுதியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் மூலம் மனிதர்களின் நிலையை அறிந்து உதவி செய்கிறது.
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது இந்த ரோபோ. மேலும் முதியவர்கள், குழந்தைகளுக்கு சிறு சிறு உதவி செய்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது இந்த குட்டி ரோபோ.
செல்லப்பிராணியாக விலங்குகளை வளர்க்கும் காலம் மறைந்து ரோபோவை வளர்க்கும் நிலை விரைவில் வரும் என தெரிகிறது.