Paristamil Navigation Paristamil advert login

இமாலய சாதனை படைத்த Facebook Messenger அப்பிளிக்கேஷன்!

இமாலய சாதனை படைத்த Facebook Messenger அப்பிளிக்கேஷன்!

15 சித்திரை 2017 சனி 17:12 | பார்வைகள் : 8978


 பேஸ்புக் சமூக வலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்தவும், சட்டிங் செய்வதற்காகவும் Facebook Messenger அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

 
இவ் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் ஐந்து வருடங்களை எட்டியுள்ளது.
 
இக் காலப்பகுதியில் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து இன்று 1.2 பில்லியனை தொட்டுள்ளது.
 
தற்போது வாட்ஸ் ஆப் போன்ற அப்பிளிக்கேஷன்களுக்கும் சிறந்த வரவேற்புக் காணப்படும் நிலையில் பேஸ்புக் மெசஞ்சரினை இவ்வளவு எண்ணிக்கையானவர்கள் பயன்படுத்துவது ஒரு இமாலய சாதனையாக பார்க்கப்படுகின்றது.
 
இது தவிர பேஸ்புக்கினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 1.9 பில்லியனை தொட்டுள்ள அதேவேளை இன்னும் சிறிது காலத்தில் 2 பில்லியனை தொட்டுவிடும்.
 
அத்துடன் இன்ஸ்டாகிராமினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் விரைவில் ஒரு பில்லியன் பயனர்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
தற்போது இன்ஸ்டாகிராமிற்கு 600 மில்லியன் பயனர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்