2.4 இன்ச் ஸ்க்ரீனில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
13 சித்திரை 2017 வியாழன் 09:52 | பார்வைகள் : 8540
கடந்த சில வருடங்களாகவே பெரிய சைஸ் ஸ்மார்ட்போனுக்கு மவுசு அதிகரித்து வரும் நிலையில் போஷ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
Posh Mobile Micro X என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் 2.4 இன்ச் தொடுதிரை வசதி மட்டுமே.
இதுவே, உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களில் மிகச்சிறிய ஸ்க்ரீனை கொண்டது இந்த ஸ்மார்ட்ஃபோன் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை உங்கள் உள்ளங்கையில் அடக்கிவிட முடியும். ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் இந்த சிறிய ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் கார்டு வசதி, 2 மெகாபிக்சல் திறன் உள்ள கேமிரா, 512 எம்பி திறன், ஆன்ட்ராய்ட் 4.4 கிட்கேட் சாப்ட்வேர் ஆகியவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.