ஆமைப்போல இயங்கும் கம்ப்யூட்டரை மின்னல் வேகத்தில் இயக்க வேண்டுமா?
9 சித்திரை 2017 ஞாயிறு 11:13 | பார்வைகள் : 8484
உங்கள் கண்னி வழக்கத்திற்கு மாறாக ஆமை போல் செயல்படுகிறதா? கவலையை விடுங்கள் இதை செய்தால் போதும் உங்கள் கணினி மின்னல் வேகத்தில் இயங்கும்.
கணினியின் பொறுமையான செயல்பாட்டிற்கான காரணத்தினைக் கண்டறிய டாஸ்க் மேனேஜர் என்ற பகுதிக்குள் சென்று உங்கள் கணினியின் விண்டோஸ் பதிப்பு, ரேம், ஸ்பேஸ் ஆகியவற்றினை சரிபாருங்கள். நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்பினை பயன்படுத்திக்கொண்டிருந்தாலோ அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய விண்டோஸ் பதிப்பினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இது உங்கள் கணினியை வேகமாக செயல்பட உதவும் ஒரு காரணி.
சில ஆப்ஸ்கள் மூலமாகவும் கணினி பொறுமையாக செயல்படும். அந்த ஆப்-ஐ கண்டறிந்து அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.
உங்கள் கணினியில் வைரஸ் உள்ளிட்டவற்றின் பாதிப்பு ஏதேனும் இருந்தால் அதை சரி செய்ய சிகிளீனர் போன்றவற்றை பயன்படுத்தலாம். இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணினியை விரைவாகச் செயல்பட செய்யலாம்.