Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக் மெசஞ்சரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

பேஸ்புக் மெசஞ்சரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!

8 சித்திரை 2017 சனி 12:10 | பார்வைகள் : 8439


 இன்று அனைவரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் இன்றியமையாத சமூக வலைத்தளமாக பேஸ்புக் மாறிவருகின்றது.

 
அந்நிறுவனமும் தனது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது.
 
இவற்றின் வரிசையில் பேஸ்புக் மெசஞ்சரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை புகுத்தவுள்ளது.
 
M எனும் பெயரினால் அழைக்கப்படும் இத் தொழில்நுட்பமானது சட்டிங் செய்யும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அதாவது பயனர் ஒருவர் அடுத்து சட் செய்ய விரும்பும் சில விடயங்களை தானாகவே பரிந்துரை செய்வதன் ஊடாக சட்டிங்கினை இலகுபடுத்துகின்றது.
 
இவ் வசதியானது அமெரிக்காவில் உள்ள iOS மற்றும் Android பயனர்களுக்காக தற்போது வழங்கப்பட்டுள்ளது.
 
அடுத்துவரும் வாரங்களில் ஏனைய நாடுகளில் உள்ள பயனர்களும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ் வசதி தொடர்பான விளக்கத்தினை தரும் வீடியோவினை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்