நாளாந்தம் 3 மணி நேரம் ஸ்மார்ட்போன்களில் மூழ்கும் இளைஞர்கள்

6 வைகாசி 2016 வெள்ளி 19:20 | பார்வைகள் : 15225
இளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடுவதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரு நாளைக்கு 3 மணிநேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் செலவிடுவதாக சர்வதேச புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
குளோபல் வெப் இண்டக்ஸ் எனும் இந்த புள்ளிவிபரம் அடிப்படையில், 18 முதல் 32 வயதுள்ள ஒவ்வொரு இளைஞரும் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் 14 நிமிடங்கள் சராசரியாக ஸ்மார்ட்போன்களில் மட்டும் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
2012ஆம் ஆண்டைவிட தற்போது இது அதிகரித்திருப்பதாகவும், தொடர்ந்து இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களில் அதிக நேரத்தை செலவிடுவது உயரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், ஜெர்மனியில் ஸ்மார்ட்போன்களில் மூழ்கியிருப்பவர்களுக்காகவே வீதிகளில் தரையில் வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025