iPhone 7, 7 Plus ஆகியவற்றின் வடிவம் எப்படியிருக்கும்?
1 வைகாசி 2016 ஞாயிறு 19:54 | பார்வைகள் : 8906
அப்பிள் நிறுவனம் இந்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் தனது புதிய ஸ்மார்ட்கைப்பேசிகளான iPhone 7 மற்றும் 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந் நிலையில் அவற்றின் வடிவம் எப்படி இருக்கும் என பலரது கற்பனையிலும் உதித்த வடிவங்கள் அவ்வப்போது இணையத்தளங்களை வலம் வந்துகொண்டிருந்தன.
எனினும் இவ்விரு கைப்பேசிகளும் iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய கைப்பேசிகளை ஒத்ததாகவே இருக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ஜப்பானின் MacFan எனும் சஞ்சிகை ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியிருக்கையில் தொழில்நுட்பத்தில் மட்டுமே இப் புதியகைப்பேசிகள் முன்னைய கைப்பேசியிலிருந்து வேறுபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹெட்போன் இணைப்பதற்கு பயன்படும் 3.5mm அகற்றப்பட்டிருக்கும் எனவும், 256GB சேமிப்பு நினைவகத்தினை கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தவிர iPhone 7 ஆனது Full HD திரையினையும், iPhone 7 Plus ஆனது Quad HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரையினையும் கொண்டிருக்கலாம் எனவும் குறித்த சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.