அப்பிள் நிறுவனம் விடுக்கும் அவசர எச்சரிக்கை!

24 சித்திரை 2016 ஞாயிறு 20:18 | பார்வைகள் : 12474
நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம்.
தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது.
அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும்.
இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர்.
அதில்“உங்கள் Apple ID செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டது, அதனை தடுப்பதற்கு பின்வரும் இணைப்பில் சொடுக்கவும்”என்று இணைப்பும் ஒன்று தரப்பட்டுள்ளது. ஆனால் இதில் கிளிக் செய்து Apple ID ஐ புதுப்பிக்க முயலும்போது தனிப்பட்ட தரவுகள், அல்லது பணம் பறிபோவதற்கான சாத்தியம் இருப்பதாக அப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது. எனவே அவ்வாறான குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு தனது பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான குறுஞ்செய்திகள் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சில பயனர்களை சென்றடைந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025