Paristamil Navigation Paristamil advert login

மாம்பழ தயிர் சாதம்

மாம்பழ தயிர் சாதம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9868


 நிறைய பேருக்கு தயிர் சாதம் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தென்னிந்திய மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மதிய வேளையில் தயிர் இல்லாத உணவை நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு உணவு சாப்பிட்டாலும், சிறிது தயிர் சாதம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும் இது வயிற்றை நிறைக்கும் உணவாகவும் இருக்கும். இத்தகைய தயிர் சாதத்தை பலவாறு செய்யலாம். அந்த வகையில் இப்போது மாம்பழ தயிர் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்...

தேவையான பொருட்கள்: 

 

சாதம் - 2 கப் 

தயிர் - 1 கப் 

கனிந்த மாம்பழம் - 1 ( பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - சிறிது 

இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) 

கடுகு - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

 

செய்முறை: 

 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். 

 

பின்னர் ஒரு பௌலில் தயிரை ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை வாணலியில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

 

அடுத்து நறுக்கிய மாம்பழத்தை அதில் சேர்த்து கிளறிக் கொண்டு, சாதம் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, ஒரு மூடி கொண்டு 1/2 மணிநேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், அருமையான மாம்பழ தயிர் சாதம் ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்