அப்பிள் நிறுவனத்தின் உதவியில்லாமல் ஐபோன் தகவல்களை பெற்ற FBI !

29 பங்குனி 2016 செவ்வாய் 16:31 | பார்வைகள் : 15111
அப்பிள் ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து, தீவிரவாதி ஒருவரின் ஐபோனுக்குள் புகுவதற்கான தொழில்நுட்ப வழியை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI கூறியுள்ளது.
இதனால் தங்களுக்கு உதவும்படி அப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் FBI கூறியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தொடர்பான வழக்கில் சையத் ரிஸ்வான் என்பவரும், அவர் மனைவியும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் FBI , அவர்களின் ஐபோனை ஆராய அதனை தயாரித்த அப்பிள் நிறுவனம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க அப்பிள் நிறுவனம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் FBI வழக்கு தொடர்ந்தது. தற்போது சையத் ரிஸ்வானி ஐபோனில் உள்ள தகவல்களை எடுத்துவிட்டதாக கூறியுள்ள FBI, வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025