சாரதி இன்றி இயங்கும் ரோபோ
24 பங்குனி 2016 வியாழன் 23:14 | பார்வைகள் : 9920
தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பாக, வாடிக்கையாளரின் வீடு வீடாக சென்று பீட்சாவை விநியோகம் செய்யும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உலக அளவில் பீட்சா விநியோகத்தில் முன்னணியில் உள்ள ‘டொமினோஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்பொழுது உலகின் பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகின்றது. நிறுவனங்களின் வரவேற்று, பொருட்கள் தயாரிப்பு, வாடிக்கையாளர்களுக்கு அதனை விநியோகம் செய்தல் என பல வேலைகளை ரோபோக்கள் செய்து வருகின்றன.
இந்நிலையில், தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், மனிதர்களைப் போன்று வாகனத்தில் சென்று குறித்த வாடிக்கையாளரைத் தேடிப் பிடித்து பீட்சாவை விநியோகம் செய்யும். இந்த ரோபோவுக்கான சோதனை ஓட்டம் நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் நகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோக்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் சாரதி இன்றி இயங்குகின்றன. இதற்கு பெட்டரியின் மின்சக்தி பயன்படுத்தப்படுகின்றது. இதில் பொருத்தப்பட்டுள்ள நகரும் திறன் அவை தங்கு தடையின்றி பயணம் செய்யவும் உதவுகிறது. சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.