Paristamil Navigation Paristamil advert login

அப்பிள் நிறுவனத்தின் iPhone SE வெளியீடு

அப்பிள் நிறுவனத்தின் iPhone SE வெளியீடு

22 பங்குனி 2016 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 9729


 கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone SE ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.

 
விழாவை அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டிம் குக் தொடங்கி வைத்து பேசினார். அப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசுக்கும் நடந்துவரும் சட்ட போராட்டங்கள் பற்றி டிம் குக் இதன் போது பேசினார். பின்னர் புதிய iPhone SE  வெளியிடப்பட்டது.
 
iPhone SE   முக்கிய அம்சங்கள்:
 
புளூடூத், 
● மேம்படுத்தப்பட்ட வை-பை, 
● புதிய மைக்ரோ போன், 
● 12 மெகா பிக்சல் கேமரா
● 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்
● பிங்கர் பிரிண்ட் சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் pay 
● 64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி
● 1 ஜி.பி. ரேம்
● Hey Siri எனும் வாய்ஸ் ரிமைண்டர்
● லைவ் போட்டோ
 
16GB போனின் விலை 399 டொலராகவும், 32GB போனின் விலை 499 டொராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
iPhone SE  போனானது  iPhone 6S போனை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. iPhone SE போன் மார்ச் 31 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஏனைய நாடுகளில் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்