Li-Fi தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் ஐபோன்கள்
2 மாசி 2016 செவ்வாய் 07:37 | பார்வைகள் : 15594
அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுவரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்குக் காரணம், சிறந்த தொழில்நுட்பமும், புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்வதும்தான்.
இதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான Li-Fi வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப்
பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan