ஹோம் தியேட்டரை விட சிறந்த இசை அனுபவத்தை தரும் நவீன 3D Headphones
24 தை 2016 ஞாயிறு 20:28 | பார்வைகள் : 9179
வழக்கமான ஹெட்போன்களுக்கு (headphones) மாறாக ஹோம் தியேட்டரை விட சிறந்த 360 டிகிரியில் இசை அனுபவத்தை தரும் புதிய நவீன 3டி ஹெட்போன்கள் சந்தையில் அறிமுகமாகியிருக்கின்றன.
அமெரிக்க ஆடியோ நிறுவனமான ஜாப்ரா மற்றும் பிரெஞ்சு நிறுவனமாக 3டி சவுண்ட் லேப்ஸ் இந்த ரக ஹெட்போனை உருவாக்கியிருக்கின்றன.
இசையை கேட்கவும், படங்களை பார்க்கவும், கணனியில் கேம்களை விளையாடவும் இந்த வகை 3டி ஹெட்போன்கள் மிகச்சிறந்த அனுபவத்தை தருகின்றன. ஜி.பி.எஸ்., கைரொஸ்கோப், காம்பஸ், அக்சிலரோ மீட்டர் என பல புதிய நவீன வசதிகளை இந்த ஹெட்போன்கள் கொண்டுள்ளன.
3டி சவுண்ட் ஒன் என்ற இந்த ஹெட்போனை முதல்முறையாக அண்மையில் நடந்த கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் இடம்பெற்றிருந்தது. தற்போதைக்கு விண்டோஸ் மற்றும் அப்பிள் இயங்குதளங்களுடன் செயற்படக்கூடிய வகையில் வெளிவருகின்றன. இதற்கென்று பிரத்யேகமாக 3டி ஆடியோ பிளேயர் மொபைல் அப்ளிகேஷனும் உண்டு.
புளூடூத் வழியாக இணைப்பை ஏற்படுத்தி பிரத்யேக மென்பொருள் மற்றும் அப்ளிகேஷன்கள் வாயிலாக இந்த ஹெட்போன்களை பயன்படுத்தலாம். வருங்காலத்தில், ஹோம் தியேட்டர்களுக்கு மாற்றாக இவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்போன்களுக்கு 324 முதல் 420 டொலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.