அன்ரோயிட் இயங்குதளத்துடன் அப்பிள் ஐபோன் அறிமுகம்
12 தை 2016 செவ்வாய் 20:24 | பார்வைகள் : 9738
அப்பிள் நிறுவனமானது Android இயங்குதளத்திலிருந்து iOS இயங்குதளத்திற்கு மாற்றி பயன்படுத்தக்கூடிய டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது iOS இயங்குதளத்தில் செயல்படும் சாதனங்களை Android இயங்குதளத்திற்கு மாற்றி செயற்பட வைக்கும் டூல் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இலவசமாகக் கிடைக்கப்பெறுவதுடன் பாவனைக்கு இலகுவானதாக இருக்கும் அன்ரோயிட் இயங்குதளத்தினை ஐபோன்களிலும் பயன்படுத்தக்கூடிய வசதியினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந் நிறுவனம் எண்ணியுள்ளது.
இதேவேளை குறித்த டூலின் ஊடாக iOS இயங்குதளத்தினூடாக சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரவுகளையும் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றக்கூடியதாக இருப்பது விசேட அம்சமாகும்.