ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள்

7 தை 2016 வியாழன் 23:09 | பார்வைகள் : 14281
ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக நான்கு இரசாயன மூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த அட்டவணையின் ஏழாவது வரிசை பூர்த்தியாகி இருப்பதோடு உலகெங்குமுள்ள அறிவியல் பாடப்புத்தகங்கள் புதுப்பிக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்த மூலகங்கள் ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 114 மற்றும் 116 மூலகங்கள் இணைக்கப்பட்ட பின்னர் ஆவர்த்தன அட்டவணையில் புதிய மூலகங்கள் சேர்க்கப்படுவது இது முதல் முறையாகும்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் இரசாயன அளவீட்டு முறைகளை நிர்வகிக்கும் பன்னாட்டு தூய மற்றும் பயன்பாட்டு இரசாயனவியல் ஒன்றியத்தினால் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி இந்த நான்கு மூலகங்களும் உறுதி செய்யப்பட்டது.
இதில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் இரசாயன குழுவொன்று 115, 117 மற்றும் 118 மூலகங்களை கண்டுபிடித்ததற்கான போதிய ஆதரங்களை சமர்ப்பித்ததாக மேற்படி ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ரிகென் கழகத்தில் ஜப்பானிய ஆய்வுக் குழு ஒன்றே 113 மூலகத்தை கண்டுபிடித்துள்ளது.
ரஷ்யாவின் இரசாயன விஞ்ஞானி டிமிட்ரி மெடலீவ், 1869 ஆம் ஆண்டு இரசாயன மூலகங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, மூலகங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மூலகங்களுக்கான நிலையான பெயர்கள் மற்றும் இரசாயன குறியீடுகளை வைக்க கோரப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025