அதிரடி வசதிகளுடன் அறிமுகமாவுள்ள புதிய iPhone
5 தை 2016 செவ்வாய் 11:19 | பார்வைகள் : 9535
உலகின் முதல் தர ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்வதில் அப்பிள் நிறுவனம் முன்னிலையில் திகழ்கிறது. அப்பிள் நிறுவனத்தினால் புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும்போது புதிய வசதிகளையும் பயனர்களுக்காக அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் காலத்தில் வெளியிடவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் 256GB சேமிப்பு கொள்ளளவினை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வரை அந் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைப்பேசிகளுள் அதி கூடிய சேமிப்பு நினைவகமாக 128GB வரையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர 3100 mAh உடைய நீடித்து செயற்படக்கூடிய மின்கலத்தினையும் இக்கைப்பேசியில் முதன் முறையாக இணைத்து அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.