விற்பனைக்கு வரும் பறக்கும் கார்!

17 பங்குனி 2015 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 14378
கடந்த சில வருடங்களாகவே பறக்கும் கார் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இது நடைமுறைக்கு சாத்தியமா? என எண்ணி முடிக்கும் கால இடைவெளியில் விற்பனைக்கும் தயாராகி விட்டன.
இதன்படி எதிர்வரும் 2017ம் ஆண்டில் முதன் முறையாக பறக்கும் கார்கள் விற்பனைக்கு விடப்படவுள்ளதாக அதனைத் தயாரித்த ஸ்லோவேக்கியாவை சேர்ந்த Aeromobil நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இக்கார்கள் தரையில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடக்கூடியதாக இருப்பதுடன், பறக்கும் போது மணிக்கு 124 மைல் வேகத்தில் பறக்கக்கூடியதாக காணப்படுகின்றன.
மேலும் இவை தரையிறங்குவதற்கு 150 அடிகள் நீளமான புற்தரை போதுமாக இருக்கின்றது.
தவிர ஒரே பறப்பில் 430 மைல்கள் தூரம் வரை பயணம் செய்யக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025