இராட்சத எலி கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்
10 பங்குனி 2015 செவ்வாய் 17:03 | பார்வைகள் : 8974
சுமார் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்த இராட்சத எலியை போன்ற ஒரு மிருகத்தின் பாகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Josephoartigasia monesi என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மிருகம் யானையின் தந்தங்கள் போன்ற நீண்ட முன் பற்களை கொண்டிருந்ததாகவும், 1000 கிலோ வரையான எடையை கொண்டிருந்தாகவும் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் அதிகமாக வாழ்ந்ததாக கருதப்படும் இந்த விலங்கினம், ஒரு புலிக்கு ஈடாக விலங்குகளை தாக்கும் திறமை கொண்டது.
அந்த இராட்சத எலியின் பற்கள் புலியின் பற்களை விட 3 மடங்கு அதிக வலிமை உடையதாகும்.
இருப்பினும், இந்த விலங்கினங்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளையே விரும்பி உண்டு வாழ்ந்துள்ளன.
இந்த விலங்கின் பற்கள் பெரும்பாலும் நிலத்தை பறிக்கவும், பிற விலங்குகளை தனது எல்லைக்கு வரவிடாமல் கடித்து துரத்த மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
அதன் பற்களை கொண்டு மிருகங்களை வேட்டையாடி உண்டதாக ஆய்வில் தெரியவரவில்லை.
சுமார் 6 அடி உயரம் வரை வளரும் இந்த மிருகத்தின் பக்கவாட்டு நீளமானது, அதன் மூக்கிலிருந்த குட்டையான வால் வரை 10 அடி வரை இருந்துள்ளது.
உருகுவேயிலுள்ள San Jose மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட அந்த விலங்கினத்தின் மண்டையோடு பாகத்தை நவீன கணனி மூலம் ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மண்டையோடு உருகுவேயில் உள்ள Montevideo தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.