Paristamil Navigation Paristamil advert login

ஆபாசப் படங்கள், வீடியோக்களுக்கு கூகுள் தடை

ஆபாசப் படங்கள், வீடியோக்களுக்கு கூகுள் தடை

24 மாசி 2015 செவ்வாய் 11:55 | பார்வைகள் : 8909


 பேஸ்புக், வாட்ஸப் போன்ற இன்றைய சமூக வலைத்தளங்களுக்கு இணையாக முன்பு பிரபலமாக இருந்தவை ப்ளாக் (Blog) எனப்படும் வலைப்பூக்கள்.

 
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் தேடுதலின் போது ஆபாசத்தரவுகள் அடங்கியவற்றைக் காண்பிக்க கூகுளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கூகுளுக்கு சொந்தமான பிரபல ‘Blogger’ இல் வரும் மார்ச் 23 ஆம் திகதி முதல் ஆபாசப்படங்கள், வீடியோக்களைப் பகிர தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், பாலுணர்வை (sexually explicit) தூண்டக்கூடிய ஆபாசக்காட்சிகள் (graphic nudity) அடங்கிய வீடியோக்களை தரவேற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இப்போது நடைமுறையில் இருக்கும் ப்ளாக்’களில் ஏதாவது ஆபாசத் தரவுகள் (adult content) இருந்தால் கூகுள் விரைவில் குறித்த ப்ளாக்’ களுக்கு Notification-களை அனுப்பும்.
 
எனினும், அவற்றில் உள்ள content எதையும் கூகுள் அழிக்காது. மாறாக, ‘அது’ மாதிரியான Blog-ஐ admin-கள் மட்டுமே பார்க்க முடிகிற வகையில் Private செய்யப்படும்.
 
ஏற்கனவே ஆபாச போட்டோ, வீடியோக்கள் அடங்கிய ப்ளாக் ஐ வைத்திருப்பவர்கள் Google Takeout-மூலமாகவோ அல்லது .xml file-ஆக export செய்தோ அல்லது Blog-லிருந்து நீக்கி சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியையும் கூகுள் வழங்கியுள்ளது. 
 
புதிய திட்டத்தை வெளியிட்டுள்ள கூகுள் இதுபற்றி மேலும் கூறுகையில், ஆபாசக் காட்சிகளை நீக்குமாறு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தாலும் எங்களால் முழுமையாக அவற்றை இண்டர்நெட்டில் இருந்து நீக்கிவிட முடியாது.
 
கலை, ஆவணப்படங்கள், விஞ்ஞான ஆய்வறிக்கைகளின் வடிவில் அவை இருக்கவே செய்யும்.
 
ப்ளாக்-ல் ஏதேனும் ஆபாசக்காட்சிகள் இருந்தால் Blogger செட்டிங்க்ஸில் ‘adult’ என்பதில் மார்க் செய்துவிடுங்கள். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் நாங்களே செய்துவிடுவோம் என தெரிவித்தது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்