Paristamil Navigation Paristamil advert login

மனிதனுடைய ஆயுட்காலத்தைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்

மனிதனுடைய ஆயுட்காலத்தைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்

4 மாசி 2015 புதன் 15:34 | பார்வைகள் : 8617


 மனிதனுடைய ஆயுட்காலம் எவ்வளவு என்பதை கண்டறியும் புதிய உயிரி கடிகாரத்தினை (Bio clock) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

 
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று கணக்கிட்டுள்ளனர். மேலும், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
 
எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் 14 வயதுக்கு மேலான மனிதர்கள் 5,000 பேரைக் கண்காணித்து நான்கு வெவ்வேறு விதமான ஆய்வுகளை நடத்தினர்.
 
டி.என்.ஏவில் நடைபெறும் மெத்தைலேஷன் என்ற வேதியியல் மாற்றங்களை வைத்து தனி மனிதனின் உயிரியல் வயதையும், தற்போது அந்த குறிப்பிட்ட மனிதரின் வயதையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.
 
அதில் உண்மையான வயதும், உயிரி வயதும் ஒரே மாதிரியாக இருப்பவர்களை காட்டிலும், உண்மையான வயதை விட உயிரி வயது அதிகமாக இருப்பவர்கள் மரணத்தை விரைவில் நெருங்குகிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
 
ஒவ்வொரு நபரின் உயிரி ஆயுளும் அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் இருந்து கணக்கிடப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் ஆய்வின் போது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்