Paristamil Navigation Paristamil advert login

அப்பிள் நிறுவனம் லாபமீட்டுவதில் புதிய சாதனை

அப்பிள் நிறுவனம் லாபமீட்டுவதில் புதிய சாதனை

29 தை 2015 வியாழன் 07:57 | பார்வைகள் : 9237


 அமெரிக்காவை சேர்ந்த அப்பிள் நிறுவனம் தனது நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 1800 கோடி டொலர் நிகர இலாபத்தைப் பெற்றுள்ளது.

 
இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது.
 
இந்த லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பது iPhone-6 மற்றும் iPhone-6 plus தொலைபேசிகளின் சாதனை படைக்கும் விற்பனையின் விளைவாகும் என்று அப்பிள் நிறுவனம் கூறுகிறது.
 
சீனாவில் இந்த விற்பனை குறிப்பாக பலமாக இருந்தது. அதிலும், iPhone விற்பனை சீனாவில் முதல் முறையாக அமெரிக்க விற்பனையை விட அதிகமாக இருந்தது.
 
டிம் குக் அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவியேற்றபோது அவருக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த ஸ்டீவ் ஜொப்ஸ் பெற்ற வெற்றியை அவரால் பெற முடியுமா என்பது குறித்து சந்தேகங்கள் இருந்தன, ஆனால் இப்போது அவருக்கு முதலீட்டாளர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்