விரைவில் டெலிகாம் துறையிலும் கால்பதிக்கிறது கூகுள்
22 தை 2015 வியாழன் 14:50 | பார்வைகள் : 8970
இண்டர்நெட் ஜாம்பவான் கூகுள் விரைவில் டெலிகாம் துறையிலும் கால்பதிக்க போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அண்மையில் விமானங்களை ஈஸியாக தேடுவதற்கு வசதியாக 'கூகுள் பிளைட்ஸ்' என்ற செர்ச் டூலை அறிமுகப்படுத்திய கூகுள் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. கூகுள் டிரான்ஸ்லேட்டரில் புதிதாக 'வாய்ஸ் ரெகக்னிஷன்' வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்நிலையில், ஸ்பிரிண்ட், டி-மொபைல் வாய்ஸ் அண்ட் டேட்டா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட டெலிகாம் நிறுவனங்களை கையகப்படுத்தி ஒரு தனி மொபைல் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டராக கூகுள் நிறுவனம் அவதாரம் எடுக்க உள்ளது. சுருக்கமாக 'நோவா' என பெயரிடப்பட்டுள்ள இந்த ப்ராஜக்ட் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, கூகுள் பைர் இண்டர்நெட் சர்வீஸ் என்ற பெயரில் புதிய பிராண்ட்பேண்ட் சேவையையும் ஆரம்பிக்க உள்ளது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வயர்லெஸ் இண்டர்நெட் மொபைல் போன் பிளான்களையும் விற்பனை செய்ய உள்ளது.
ஆனால், இந்த புதிய சேவையை எந்த அளவுக்கு விரிவுபடுத்த போகிறது, அதற்கு எவ்வளவு செலவாகும், இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்த எந்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்க போகிறது என்பதை உடனடியாக தெரிவிக்க 'கூகுள்' மறுத்துவிட்டது