Paristamil Navigation Paristamil advert login

சாரதி இன்றி கைக்கடிகாரத்தில் காரை நிறுத்தும் வசதி

சாரதி இன்றி கைக்கடிகாரத்தில் காரை நிறுத்தும் வசதி

18 மார்கழி 2014 வியாழன் 11:23 | பார்வைகள் : 9388


 

 
பிரபல‌ கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ கார்களுக்கான பல்வேறு தொழில்நுட்பங்களை சோதனை செய்து பார்த்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி வருகின்றது. 
 
அந்த வகையில் அண்மையில் கைக்கடிகாரம் மூலம் தானியங்கி கார் நிறுத்தும் வசதி கொண்ட தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 
 
விரைவில் இச்சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் விற்­ப­னைக்கு வரும் என தெரிகிறது.
 
கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பார்க் செய்ய வேண்­டிய உத்­த­ர­வு­களை காரில் பொருத்­தப்­பட்­டுள்ள தானி­யங்கி பார்க்கிங் கரு­விக்கு கொடுத்து விட்டால் சாரதி உதவி இல்­லாமல் தானா­கவே காரை நிறுத்த வேண்­டிய இடத்தை உள் வாங்கி காரை பார்க்கிங் செய்து கொள்ளும் படி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 
 
மேலும் கைக்க­டி­காரம் மூலம் திரும்பி வந்து அதே இடத்­திற்கு தானா­கவே காரை வர செய்­யவும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
 
தானாகவே கார் பார்க் செய்து கொள்ளும் போது பிற கார்­க­ளுடன் மோதல் ஏற்­படும் வாய்ப்பு அதிகம்.
 
இதை தவிர்க்கும் வகையில் இப்­பு­திய தொழில் நுட்பம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்