ஐபோன் பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
14 ஐப்பசி 2016 வெள்ளி 13:52 | பார்வைகள் : 9004
சாம்சங் கேலக்ஸி நோட் 7 கைப்பேசிகள் வெடிக்கிறது என்ற புகார் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் கைப்பேசிகளும் வெடிப்பதாக புகார்கள் ஆதாரங்களுடன் வந்துள்ளமையினால் அவதானமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைப்பேசி தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 போன்கள் சார்ஜ் போடும் போது வெடிப்பதாக பல்வேறு புகார்கள் ஆதாரங்களுடன் வந்தன.
இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த மொடல் கைப்பேசிகளின் உற்பத்தியை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்தது, மேலும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியது.
கேலக்ஸி நோட் 7 போன்களுக்கு போட்டியாக கருதப்படும் இன்னொரு பிரபல கைப்பேசி நிறுவனமான ஆப்பிளின் ஐபோன் 7 மாடல் கைப்பேசியும் வெடித்து சிதறுகிறது என்ற தகவல் தற்போது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஒருவர் தன்னுடைய ஐபோன் 7 மூலம் வீடியோ எடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த கைபேசியானது வெடித்துள்ளது. நல்லவேளையாக அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் பற்றி மேலும் எதாவது புகார்கள் வந்தால் நிச்சயம் சாம்சங் போல இதுவும் பிரச்சனையை எதிர்கொள்ள கூடும் என்பது மட்டும் உண்மை.