Paristamil Navigation Paristamil advert login

Samsung போன் பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Samsung போன் பாவனையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

11 ஐப்பசி 2016 செவ்வாய் 13:35 | பார்வைகள் : 8879


 சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி நோட் 7 தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அனைவரும் தங்களது மொபைல்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்கும்படி சாம்சங் நிறுவனம் எச்சரித்துள்ளது.

 
ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது சாம்சங்.
 
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்சி நோட் 7 போன்கள், சார்ஜ் போடும் போது திடீரென்று தீப்பிடித்து எரிவதாக பல புகார்கள் வந்தன.
 
அப்படி புகார் கூறிய வாடிக்கையாளர்களுக்கு அதே ரக மாடலில் வேறு போனை நிறுவனம் தர அதுவும் தீ பிடித்து வெடிப்பதாக புகார் எழுந்தது.
 
2.5 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பி வருவதால் சாம்சங் நிறுவனம் செய்வதறியாது திகைத்து வருகிறது.
 
இந்நிலையில் இன்று சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாம்சங் கேலக்சி நோட் 7 ரக ஸ்மார்ட் போன்களின் விற்பனை மற்றும் குறைபாடு கொண்ட தயாரிப்புக்கு பதிலாக வேறு செல்போன்களை மாற்றித் தருவதை நிறுத்தி வைக்குமாறு உலகில் உள்ள எங்களது முகவர்களை அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இந்தவகை போன்களை பயன்டுத்தி வரும் வாடிக்கையாளர்களும், குறைபாடுகளுக்காக மாற்றாக புதிய போன்களை பெற்ற வாடிக்கையாளர்களும் தங்களது செல்போன்களை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே பல்வேறு புகார்களின் எதிரொலியாக சாம்சங் நிறுவனம் உற்பத்தியையும் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்