அவதானம் - மின்னஞ்சல் கணக்குகளை உளவு பார்க்கும் யாகூ!
7 ஐப்பசி 2016 வெள்ளி 15:22 | பார்வைகள் : 14095
அமெரிக்காவில் இயங்கி வரும் யாகூ நிறுவனம், தனது பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை உளவு பார்த்து வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முண்ணனி இணையதள சேவை நிறுவனமான யாகூ, சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் யாகூவில் மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருக்கும் பயனாளர்களை, அந்நிறுவனம் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென மென்பொருள் ஒன்றையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
யாகூ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மூலம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, யாகூ நிறுவனம் இதை செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
தங்களுக்கு இது போன்ற கோரிக்கைகள் வரவில்லை எனவும், அப்படி வந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் கூகுள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


























Bons Plans
Annuaire
Scan