பேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோரின் கவனத்திற்கு!
3 ஐப்பசி 2016 திங்கள் 16:21 | பார்வைகள் : 12237
குறைந்த இணைய வேகம் காரணமாக பேஸ்புக் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவோருக்காகவே ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறது.
அதன் பெயர் மெசஞ்சர் லைட். இதை ஆண்ட்ராய்டு பயன்படுத்துவார் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதில், டெக்ஸ்ட், படங்கள் ஆகியவைகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், வீடியோ, வீடியோ சாட் மற்றும் பணம் செலுத்துதல் ஆகியன செய்ய முடியாது.
இவ்வசதி முதல்கட்டமாக கென்யா, துனிசியா, மலேசியா, இலங்கை மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. விரைவில் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.


























Bons Plans
Annuaire
Scan