நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக உணரக் கூடிய ரோபோ
26 புரட்டாசி 2016 திங்கள் 19:36 | பார்வைகள் : 8903
அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பூமியை தனது உள்ளங்கையில் அடக்கினான் மனிதன்.
அந்தவகையில் தற்காலத்தில் பல்வேறு துறைகளிலும் ரோபோ தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்திவருவதை எம்மால் அவதானிக்ககூடியதாக உள்ளது.
ரோபோ தொழில்நுட்பத்தின் மற்றுமோர் பரிமாணம் தொடர்பான பார்வை அடுத்து.
மினிட்டார் எனப்படும் இந்த ரோபோ கோஸ்ட் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன படைப்பாகும் இந்த ரோபோவால் நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக உணர முடியும்.
அதேபோன்று அந்த மாற்றங்களுக்கு ஏற்றவாறு தனது செயற்பாடுகளையும் மாற்ற முடியும். இது பலவிதமான வித்தைகளை செய்யக்கூடியது.
கார்ட் வீல் என்ற துல்லிக் குதிக்கும் வித்தை, படிகளில் ஏறுவது மற்றும் கதவுகளை திறப்பது போன்றவற்றையும் இந்த ரோபோ செய்யும்.