Paristamil Navigation Paristamil advert login

ஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்

ஆளில்லா விமானம் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் பேஸ்புக்

22 ஆடி 2016 வெள்ளி 10:48 | பார்வைகள் : 8657


 முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லா விமானம் மூலம், வானிலிருந்து இணையதள வசதிகளை ஒளிக்கீற்று மூலம் அனுப்ப முடியும் என நம்பப்படுகின்றது.

 
தற்போது, அந்த ஆளில்லா விமானமானது அமெரிக்காவில் தனது முதல் சோதனைப் பயணத்தை முடித்துள்ளது.
 
பிரித்தானியாவின் கட்டுமானத்தில் உருவாகி வரும் பேஸ்புக்கின் இந்த ஆளில்லா விமானமானது சுமார் 90 மணி நேரம் வானில் பறந்துள்ளது.
 
எனினும், பல பில்லியன் வாடிக்கையாளர்களின் இணைய தேவையினை பூர்த்தி செய்ய, வாரக்கணக்கில் இந்த இணைய விமானத்தை இயக்க, தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பெரிய அளவில் முன்னேற்றங்கள் மேற்கொள்ளவேண்டுமென சமூகவலைத்தளங்களில் மிகப் பெரிய நிறுவனமான பேஸ்புக் கூறியுள்ளது.
 
இதே போன்ற திட்டத்தை கூகுள் நிறுவனமும் செயல்படுத்துவதில் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்