விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy J
12 ஆடி 2016 செவ்வாய் 14:02 | பார்வைகள் : 9161
சம்சுங் நிறுவனம் விரைவில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy J இனை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core 1.5GHz Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 200GB வரை அதிகரிக்கும் வசதி தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் Android 5.1 (Lollipop) இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இக் கைப்பேசியானது இரட்டை சிம் வசதியினையும், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர நீடித்த நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய 4000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது. எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.