Paristamil Navigation Paristamil advert login

iPhone 7 கைப்பேசியில் மற்றுமொரு புதிய வசதி

iPhone 7 கைப்பேசியில் மற்றுமொரு புதிய வசதி

21 ஆனி 2016 செவ்வாய் 21:32 | பார்வைகள் : 11352


 எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அப்பிள் நிறுவனம் iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய தனது இரு புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

 
இந்நிலையில் இக் கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலையும் அந் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
 
எனினும் யூகத்தின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
 
இக் கைப்பேசிகள் தொடர்பான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டு போகும் தருணத்தில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
 
இத் தகவலின்படி iPhone 7 கைப்பேசியானது இரண்டு சிம் கார்ட்டினை பயன்படுத்தக் கூடிய வசதியினைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எது எவ்வாறெனினும் இவற்றில் பயன்படுத்தப்படவுள்ள Processor, RAM மற்றும் இயங்குதளம் என்பன மேம்படுத்தப்பட்டிருக்கும் என இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற WWDC நிகழ்வில் தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்