Paristamil Navigation Paristamil advert login

இருட்டிலும் தெளிவாக புகைப்படம் எடுக்கும் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இருட்டிலும் தெளிவாக புகைப்படம் எடுக்கும் ஸ்மார்ட்போன் அறிமுகம்

11 ஆனி 2016 சனி 15:06 | பார்வைகள் : 8835


 டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இருட்டிலும் புகைப்படம் எடுக்கும் வகையிலான நைட்விஷன் கமரா வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

 
டென்மார்க்கைச் சேர்ந்த லூமிகான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டி3 வகை ஸ்மார்ட்போன்கள், உலகின் முதல் நைட்விஷன் கமரா வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமை பெற்றுள்ளது.
 
இந்த வகை ஸ்மார்ட்போன்களில் ஐஆர் எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கும் பிளாஷ் உடன் கூடிய 4 மெகாபிக்சல் நைட்விஷன் கமராவைக் கொண்டுள்ளது. இந்தவகைக் கமராக்கள் மூலம் கடிம் இருட்டிலும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
 
மேலும், 3 ஜிபி ரெம், 4.8 இன்ச் தொடுதிரையும், 128 ஜிபி நினைவக வசதியும் கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கமரா 13 மெகாபிக்சல் கொண்டதாகவும், முன்பக்கக் கமரா 5 மெகாபிக்சல் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல, 360 டிகிரி பிங்கர் சென்சார் வசதியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் தண்ணீர் மற்றும் தூசுக்களால் பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய சந்தையில் 925 அமெரிக்க டொலர்கள் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்