பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகள்! விஞ்ஞானிகள் முயற்சி
7 ஆனி 2016 செவ்வாய் 16:43 | பார்வைகள் : 9000
மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
உலகெங்கிலும் மனித உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உறுப்புகள் போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் கலிபோர்னியா பல்கலக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மனிதக் குருத்தணுக்களை பன்றிகளின் கருக்களில் ஊசி மூலம் செலுத்தி “சிமேரா” என்றழைக்கப்படும் மனித-பன்றி கருக்களை உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த கருக்கள் பொதுவாக சாதாரண பன்றிக் கருக்களைப் போலத்தான் இருக்கும் ஆனால் அவற்றின் உறுப்புகளில் ஒன்று மனித செல்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறப்படுகின்றது.
ஆனால் இந்த மனித-பன்றி சிமேராக்களால் ஆனா கருக்கள், 28 நாட்கள் வரை வளர அனுமதிக்கப்பட்டு பின்னர் அந்த கரு கலைக்கப்பட்டு, திசுக்கள் பரிசோதனைக்கு செய்யப்படும்.
இந்த மனித செல்கள் பன்றியின் மூளைக்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அஞ்சுகிறார்கள்.