நாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்
20 வைகாசி 2016 வெள்ளி 16:05 | பார்வைகள் : 8992
சிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சிறிய பூச்சிகளுக்கு இருப்பது போல் பறக்கும் இறக்கைகளையும் மின்னிலையிலான இறங்கு தள வசதிகளையும் கொண்டதாக இந்த பறக்கும் ரோபாக்கள் இருப்பதால், இவற்றால் மேற்கூரையில் தரையிறங்க முடியும்.
இந்த வசதிகளால் இவை பயணித்துக் கொண்டிருக்கும் போதே இறங்கி விடவும், பறப்பதைத் தொடரும் முன் சக்தியைப் பாதுகாக்கவும் இயலும்.
இந்த சிறிய ஆளில்லா விமானத்தின் சென்சர் வசதியுடன் கூடிய திரள்கள், தேசிய பேரிடர் ஏற்படும் சமயங்களில் அப்பகுதியை இனம் காண உதவுகிறது.
இந்த வசதியினால் மீட்புக் குழுவினருக்கு முக்கிய தகவல்களை அனுப்பி ஆபத்தில் இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற இயலும் என நம்பப்படுகிறது.