ஐபோன்களுக்காக Opera VPN உலாவி அறிமுகம்
10 வைகாசி 2016 செவ்வாய் 20:53 | பார்வைகள் : 9994
முன்னணி இணைய உலாவிகளான கூகுள் குரோம், மெசில்லா பயர்பாக்ஸ் வரிசையில் இடம்பிடித்திருக்கும் மற்றுமொரு உலாவியாக ஒபெரா காணப்படுகின்றது.
இவ் உலாவியில் VPN வசதியானது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
Virtual Private Network எனப்படும் இவ் வசதியானது எவ்விதமான தடயங்களும் இன்றி இணையத்தளங்களை பார்வையிடும் வசதியினை தருகின்றது.
முதன் முறையாக டெக்ஸ்டாப் கணணிகளில் பயன்படுத்தும் ஒபெரா இணைய உலாவியிலேயே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இது பயனர் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் மெபைல் இணைய உலாவிகளிலும் இவ் வசதியினை தர ஒபெரா நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில் முதன் முதலாக ஐபோன்களில் VPN வசதி அறிமுகம் செய்யப்படுகின்றது.
இதில் குறித்த நாட்டில் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களையும் பார்வையிட முடியும்.
இதற்காக ஐந்து வெவ்வேறு நாடுகளில் இருந்து இணையத்தளங்களை பார்வையிடுவது போன்ற வசதியும் தரப்பட்டுள்ளது.