Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணி...

உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணி...

11 ஆடி 2023 செவ்வாய் 10:53 | பார்வைகள் : 3388


உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோம்பர் 5ம் திகதி தொடங்கி நவம்பர் 19ம் திகதி வரை நடைபெற உள்ளது.

முதல் போட்டி நவம்பர் 19-ம் திகதி  அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.

அந்த அட்டவணையில் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

இந்த உலகக்கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மொத்தம் 10 மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடந்தன.

இப்போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மேலும் 2 அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிச்சுற்று நடைபெற்றது. இந்த தகுதிச் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்திருக்கிறது.

இலங்கை அணியைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்காவும், நெதர்லாந்த் அணியைச் சேர்ந்த விக்ரம்ஜித் சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

3ம் இடத்தில் ஸ்காட்லாந்த் அணியைச் சேர்ந்த பிரண்டன் மெக்முல்லனும், 4ம் இடத்தில் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த சீன் வில்லியம்ஸும், 5ம் இடத்தில் நெதர்லாந்த் அணியைச் சேர்ந்த பாஸ் டீ லீட்டும்,

6ம் இடத்தில் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த சிக்கந்தர் ராசாவும், 7-ம் இடத்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்காட் எட்வர்ட்ஸ், 8ம் இடத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த வனிந்து ஹசரங்கா,

9ம் இடத்தில் மகேஷ் தீக்சனாவும், 10ம் இடத்தில் ஸ்காட்லாந்த் அணியைச் சேர்ந்த கிறிஸ் சோல், 11ம் இடத்தில் ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ங்கரவா ஆகியோரும் தேர்வாகி இருக்கிறார்கள்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்