உலகம் முழுவதும் ஸ்தம்பித்து போன பேஸ்புக்

19 ஆனி 2014 வியாழன் 17:29 | பார்வைகள் : 15394
உலகளாவிய ரீதியில் அனேகமான முகப்புத்தக பாவனையாளர்கள் இன்று தமது கணக்குகளை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலை சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்தது.
முகப்புத்தகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை “Sorry, something went wrong. We are working on getting this fixed as soon as we can.”என்ற தகவல் திரையில் தென்பட்டதை அவதானிக்க முடிந்தது.
“Go Back” பட்டினை அழுத்தி மீண்டும் முகப்புத்தக கணக்கினுள் நுழைய முயற்சித்த போதும் மீண்டும் மேலே குறிப்பிட்ட தகவலே கிடைத்தது.
நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ள போதிலும் இந்த ஸ்தம்பிதம் குறித்து பேஸ்புக் நிறுவனம் இதுவரை உத்தியோக பூர்வமாக எவ்வித காரணத்தினையும் தெரிவிக்கவில்லை.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025