Paristamil Navigation Paristamil advert login

சிறுநீரிலிருந்து மின்சக்தி கண்டுபிடிப்பு

சிறுநீரிலிருந்து மின்சக்தி கண்டுபிடிப்பு

14 ஆனி 2014 சனி 11:31 | பார்வைகள் : 9554


வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும், சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும்.
 
இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
 
எரிபொருள் கலங்கள் தற்போது கார்களுக்கும் சில தொலைபேசி மின்னேற்றிகளுக்கும் சக்தியூட்ட பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்