காணாமல் போன தொலைபேசியை கண்டுபிடிக்க மென்பொருள்
9 ஆனி 2014 திங்கள் 15:08 | பார்வைகள் : 10043
உலகில் அதிகமானோருக்கு மறதி என்பது உள்ளது, ஏதேனும் ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்து விட்டு எங்கு வைத்தோம் என அடுத்த நொடியே மறந்து விடுவார்கள். அதுபோலவே தங்கள் செல்போனை வைத்த இடத்தையும் மறந்து விடுவார்கள். அவர்களின் கவலையை போக்கவே புதிய வகை மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செல்போன் தொலைந்து விட்டதா? வைத்த இடம் தெரியாமல் செல்போனை தேடுகிறீர்களா? கவலை வேண்டாம். உங்கள் செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிய புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. அதுதான், குரலை அடையாளப்படுத்திக்கொண்டு, பதில் அளிக்கும் தொழில்நுட்பம். இதற்கு மார்கோபோலோ அப் என்று பெயரிட்டுள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த மாட் வெய்செக் என்பவர் இதை வடிவமைத்துள்ளார்.
இதன்படி, செல்போன் தொலைந்து விட்டால், ‘மார்கோ’ என்று கூச்சலிட வேண்டும். உடனே, அந்த செல்போன், ‘போலோ’ என்று பதில் கூச்சல் எழுப்பும். அதன்மூலம், செல்போனை இருப்பிடத்தை அறியலாம்.
இதற்காக, ‘மார்கோ’ என்ற வார்த்தை, உங்கள் குரலில் ஏற்கனவே பதிவு செய்திருக்க வேண்டும். வேறு ஒரு குரலில் மார்கோ என்று அழைத்தால் செல்போனில் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.